முதற் பக்கம்

Multi tool use
தமிழ் விக்கிப்பீடியாவிற்கு வருக,
யாவராலும் தொகுக்கப்படக் கூடிய ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியம்.
தமிழ்க் கட்டுரைகள்: 1,20,397
|
|
|
- அறிவியல்
- கணிதம்
- தொழில்நுட்பம்
|
- புவியியல்
- சமூகம்
- வலைவாசல்கள்
|
கட்டுரைகள்: அகர வரிசை - புதியன
முதற்பக்கக் கட்டுரைகள்
|
ஆன்டன் செகாவ் (1860–1904) புனைகதை இலக்கிய உலகில் தலைசிறந்தவராகக் கருதப்படும் ஓர் உருசிய எழுத்தாளர் ஆவார். நாடக ஆசிரியராக இருந்து படைத்த, கடற்புறா, அங்கிள் வான்யா, மூன்று சகோதரிகள், செரிப் பழத்தோட்டம் ஆகிய நான்கு செவ்வியல் நாடகங்கள் மற்றும் அவரது சிறந்த சிறுகதைகள் ஏனைய எழுத்தாளர்கள் மற்றும் விமர்சகர்களிடம் தனி மரியாதையை ஏற்படுத்தின. செகாவ் தனது இலக்கியப் பயணத்துடன் கூடவே, மருத்துவப் பணியையும் மேற்கொண்டு வந்தார். செகாவின் நாடகங்கள் மரபுவழி நடிப்புக்குப் பதிலாக, பார்வையாளர்களுக்கு "மனநிலை சார்ந்த அரங்கியல்" என்னும் நுட்பத்தையும், "நாடகத்தின் உரைகளுக்குள் ஆழ்ந்து போகும் நிலையையும்" கொடுத்தன. இவரது கதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மேலும்...

எயித்தியப் புரட்சி (1791–1804) கரிபியனில் உள்ள பிரெஞ்சுக் குடியேற்ற நாடான செயிண்ட் டொமிங்குவில் ஏற்பட்ட புரட்சியைக் குறிப்பதாகும். இந்தப் புரட்சியின் விளைவாக அங்கு அடிமை முறை ஒழிக்கப்பட்டதுடன் எயிட்டி ஆபிரிக்கர்களால் ஆளப்பட்ட முதல் குடியரசாக மலர்ந்தது. இதுவே அடிமைத்தனத்திற்கு எதிராக வெற்றி கண்ட முதல் புரட்சியாகும். எயித்தியப் புரட்சி பிற்காலத்தில் நிகழ்ந்த பல முக்கிய புரட்சிகளுக்கு வழிகோலியதுடன் அமெரிக்காக்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதிலும் முக்கிய பங்காற்றியது. கரிபியன் தீவுகளின் செல்வச்செழிப்பு ஐரோப்பிய சர்க்கரைத் தேவைகளைச் சார்ந்து இருந்தது. இங்கிருந்த கரும்புத் தோட்ட உரிமையாளர்கள் வட அமெரிக்காவிலிருந்து மளிகைகளையும் ஐரோப்பாவிலிருந்து தொழிற் பொருட்களையும் வாங்க சர்க்கரை ஏற்றுமதியை நம்பி இருந்தனர். மேலும்...
மேலும் கட்டுரைகள்...
|
உங்களுக்குத் தெரியுமா?
|
தர்மராஜிக தூபி மௌரியப் பேரரசர் அசோகர் ஆட்சிக் காலத்தில் கிமு 3-ஆம் நூற்றாண்டில், கௌதம புத்தரின் எரியூட்டப்பட்ட உடலிருந்து கிடைத்த சில எலும்புகள் மற்றும் சாம்பலின் ஒரு பகுதியைக் கொண்டு நிறுவப்பட்டது.
பக்த நந்தனார் (படம்) பிரபல கருநாடக இசைப் பாடகர் மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் நடித்த ஓரேயொரு திரைப்படம் ஆகும், இது 1935 இல் வெளியானது.
லிமாவின் புதையல் 1820 இல் பெருவின் லிமா நகரில் இருந்து கொண்டு செல்லப்பட்டு, புதைக்கப்பட்ட 208 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஒரு புதையல் ஆகும்.
திரீச்சர் காலின்சு நோய்த்தொகை என்பது காதுகள், கண்கள், கன்ன எலும்புகள், முகவாய் ஆகியவற்றில் உருக்குலைவுகளை ஏற்படுத்தும் ஒரு மரபியல் கோளாறு ஆகும்.
தொகுப்பு
|
|
|
செய்திகளில் 
|
இந்தியாவின் காசுமிர் மாநில புல்வாமா மாவட்டத்தில் ஜெய்சு-இ-முகமது அமைப்பினர் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 40 மத்திய சேமக் காவல் படையினர் உயிரிழந்தனர்.
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்றில் ஆடவர் ஒற்றையர் வாகையாளர் பட்டத்தை நோவாக் ஜோக்கொவிசும் (படம்) பெண்கள் ஒற்றையர் வாகையாளர் பட்டத்தை நவோமி ஒசாகாவும் பெற்றனர்.
இந்தியத் துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில் முதல் தடவையாக தேர்வுத் தொடர்ப் போட்டியில் வென்றது.
இந்தோனேசியாவில் சுண்டா நீரிணையில் ஏற்பட்ட ஆழிப்பேரலையின் காரணமாக 426 பேர் உயிரிழந்தனர். சுமார் 7,202 பேர் காயமடைந்தனர்.
அண்மைய இறப்புகள்: சாருகேசி - பிரபஞ்சன்
இலங்கைத் துடுப்பாட்ட அணியின் தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணம் - பிற நிகழ்வுகள் - விக்கிசெய்திகள்
|
இன்றைய நாளில்...
|
பெப்ரவரி 21: பன்னாட்டுத் தாய்மொழி நாள்
1804 – நீராவியால் இயங்கிய முதல் தொடருந்து இயந்திரம் (படம்) வேல்சில் இயக்கி சோதித்துப் பார்க்கப்பட்டது.
1808 – உருசியப் படை பின்லாந்து எல்லையைத் தாண்டி சுவீடனை அடைந்தது. பின்லாந்துப் போர் ஆரம்பமானது. இப்போரில் சுவீடன் பின்லாந்தை உருசியாவுக்கு இழந்தது.
1848 – கார்ல் மார்க்சும் பிரெட்ரிக் எங்கெல்சும் பொதுவுடைமை அறிக்கையை வெளியிட்டனர்.
1878 – முதலாவது தொலைபேசி விபரக்கொத்து அமெரிக்காவில் கனெடிகட்டில் வெளியிடப்பட்டது.
1885 – வாசிங்டன் நினைவுச் சின்னம் திறந்து வைக்கப்பட்டது.
1952 – வங்காள மொழி இயக்கம்: கிழக்கு பாக்கித்தானில் வங்காள மொழியை அதிகாரபூர்வ மொழியாக்கக் கோரி டாக்கா பல்கலைக்கழகத்தில் மாணவர் நடத்திய எழுச்சிப் போராட்டம் ஒன்றின் போது காவற்துறையினர் சுட்டதில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
1972 – சோவியத்தின் ஆளில்லா லூனா 20 சந்திரனில் இறங்கியது.
2013 – 2013 ஐதராபாத் குண்டு வெடிப்புக்கள்: இந்தியாவின் ஐதராபாத் நகரில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பில் 20 மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
அண்மைய நாட்கள்: பெப்ரவரி 20 – பெப்ரவரி 22 – பெப்ரவரி 23
தொகுப்பு
|
|
சிறப்புப் படம்
|

|
புனித பசில் பேராலயம் உருசியத் தலைநகர் மாஸ்கோவில் செஞ்சதுக்கத்தில் அமைந்துள்ள ஒரு கிறித்தவத் தேவாலயம் ஆகும். கசான், அசுத்திரகான் நகரங்களைக் கைப்பற்றப்பட்டதன் நினைவாக இக்கோவில் உருசியப் பேரரசர் நான்காம் இவானின் ஆணைப்படி 1555 இல் கட்ட ஆரம்பிக்கப்பட்டு 1561 இல் முடிக்கப்பட்டது. 1600 இல் பேரரசர் இவான் நினைவு மணிக்கூண்டுக் கோபுரம் கட்டப்படும் வரை இக்கட்டடமே மாஸ்கோவின் உயர்ந்த கட்டடமாக இருந்து வந்தது. ஆரம்பத்தில் ஒரு நடுவில் உள்ள தேவாலயத்தைச் சுற்றிவர எட்டுக் கோவில்கள் கட்டப்பட்டன. பத்தாவது கோவில் 1588 இல் வசீலி என்ற புனிதரின் சமாதி மீது கட்டப்பட்டது. 1930களில் போல்செவிக்குகள் இக்கோவிலை இடிக்கத் திட்டமிட்டபோதும், பின்னர் அத்திட்டம் கைவிடப்பட்டது. 1991 முதல் அரச வரலாற்று அருங்காட்சியகத்தின் ஒரு பகுதி இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, அத்துடன் இடையிடையே தேவாலய வழிபாடுகளும் நடைபெறுகின்றன.
படம்: அ. சாவின் தொகுப்பு · சிறப்புப் படங்கள்
|
|
|
சமுதாய வலைவாசல் – திட்டம்பற்றித் தெரிந்துகொள்ள, நீங்கள் என்ன செய்ய முடியும், தேவையானவற்றை எங்கு தேட முதலியவற்றை அறிய.
உதவி – விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துவது தொடர்பான வினாக்களைக் கேட்க.
தூதரகம் – தமிழ் தவிர்த்த பிறமொழிகளில் விக்கிப்பீடியா குறித்த தொடர்பாடல்கள்.
ஆலமரத்தடி – விக்கிப்பீடியாவின் கொள்கை விவாதங்களும் தொழில்நுட்ப விவாதங்களும் குறித்து உரையாட.
புதியன - விக்கிப்பீடியாவின் புதிய கட்டுரைகள்.
- விக்கிப்பீடியா மொழிகள்
இந்த விக்கிப்பீடியா தமிழில் எழுதப்பட்டுள்ளது. 2003-இல் தொடங்கப்பட்டது, தற்போது 1,20,397 கட்டுரைகள் உள்ளன. மேலும் பல விக்கிப்பீடியாக்கள் உள்ளன; அவற்றுள் மிகப்பெரியன கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
- 10,00,000 கட்டுரைகளுக்கு மேல்: English
· Deutsch
· español
· français
· italiano
· Nederlands
· 日本語
· polski
· русский
· svenska
· Tiếng Việt
- 2,50,000 கட்டுரைகளுக்கு மேல்: العربية
· Bahasa Indonesia
· Bahasa Melayu
· català
· čeština
· euskara
· فارسی
· 한국어
· magyar
· norsk
· português
· română
· српски / srpski
· srpskohrvatski / српскохрватски
· suomi
· Türkçe
· українська
· 中文
- 50,000 கட்டுரைகளுக்கு மேல்: bosanski
· български
· dansk
· eesti
· Ελληνικά
· Simple English
· Esperanto
· galego
· עברית
· hrvatski
· latviešu
· lietuvių
· norsk nynorsk
· slovenčina
· slovenščina
· ไทย
விக்கிப்பீடியாக்களின் முழுமையான பட்டியல்
YjTahaNFbKyTI,zqQr
Popular posts from this blog
0
0
$begingroup$
Need help with this problem. Suppose our lazy professor collects a quiz and a homework assignment from a class of n students one day, then distributes both the quizzes and the homework assignments back to the class in a random fashion for grading. Each student receives one quiz and one homework assignment to grade. (a) What is the probability that every student receives someone else's quiz to grade, and someone else's homework to grade? (b) What is the probability that no student receives both their own quiz and their own homework assignment to grade? In this case, some students may receive their own quiz, and others may receive their own homework assignment. (c) Compute the limiting probability as n approaches infinity in each case.
...
Aardman Animations, Ltd. Aardman Animations Tipo privada Atividade Animação em stop-motion , Animação em CGI Fundação 1972 Fundador(es) Peter Lord David Sproxton Sede Bristol, Inglaterra Reino Unido Proprietário(s) Dreamworks Pessoas-chave Peter Lord David Sproxton Nick Park Divisões Aardman Features Aardman Digital Aardman Commercials Aardman Broadcast Aardman International Aardman Rights Aardman Effects Aardman 3-D Systems Aardman Nathan Love AardBoiled Website oficial aardman.com ...
"Pontes Indestrutíveis" Single de Charlie Brown Jr. do álbum Ritmo, Ritual e Responsa Lançamento 2007 Formato(s) Rádios Gravação EMI Gênero(s) Ska punk Duração 3:32 (versão do álbum) 3:33 (versão do single) Gravadora(s) EMI Composição Chorão,Charlie Brown Jr. Cronologia de singles de Charlie Brown Jr. "Não Viva Em Vão" (2007) "Be Myself" (2008) ...